Du er ikke logget ind
Beskrivelse
சங்க காலத்திலிருந்து தலைமுறை தலைமுறையாகக் கட்டமைக்கப்பட்ட கூட்டு நனவிலி தமிழ் மனம் மௌனன் யாத்ரிகாவின் கவிதைகளில் அழகியலாக மலர்கிறது. இவருடைய கவிதைகளில் பாணரும், விரவியரும், கூத்தருமாகச் சுற்றி நின்று குரவைக் கூத்து ஆடுகிறார்கள். தொல்காப்பியர் பேசும் திணைக் கோட்பாடு சார்ந்த தமிழ் வாழ்க்கையின் தொல் வகைமை இன்றைய கிராம வாழ்க்கையில் எப்படியெல்லாம் தொழிற்படுகிறது என்பதை மௌனன் யாத்ரிகாவின் நவீனக் கவிதைகள் பேசுகின்றன. மொத்தத்தில் இக்கவிதைகளின் உள்ளே தற்காலத் தமிழ் அழகியலின் ஜல்லிக்கட்டு நடப்பதைத் தீவிர வாசகனால் உணர முடியும். - இந்திரன் கலை இலக்கிய விமர்சகர்